Friday 6 March 2015

அழகான வாழ்க்கை...




அன்பிற்கு எல்லையாய் அன்னை !
அரவணைத்து வளர்க்கின்றாள் என்னை !
அறிவிற்குச் சிகரமாய்த் தந்தை !
அறிவுரையால் சீரானது என் சிந்தை !

கல்வியைக் கண்ணாய்க் கற்பிக்கும் ஆசிரியர்கள் !
கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியவர்கள் !
கலைகளைச் சிறப்பாய்க் கற்பிக்கும் குருமார்கள் !
கலைமகளின் உருவாய்த் தோன்றியவர்கள் !

ஓம் காரப் பிரணவமாய் விளங்கிடும் இறைவன் !
ஒவ்வொரு மணித்துளியும் என்னுடன் இருக்கும் பரமன்   !
ஓதும் வேதமாய் எங்கும்  நிறைந்திருக்கும் பரந்தாமன் !
ஒவ்வொரு செயலிலும் என் துணையாய் நிற்கும் நண்பன் !

அனுபவங்களைப் பகிரும் தாத்தா பாட்டி !
அணுகினேன் அவர்களை இருகரம் நீட்டி !
அன்றாடம் என்னை வாழ்த்தும் தாத்தா !
அடைந்தேன் மகிழ்வை அவரது பாட்டால் !

குழலோடு எழிலாகக் காட்சியளிக்கும் கண்ணன் !
குழந்தைக்கு என்றும் துணையாய் நிற்கும் மன்னன் !
மயிற்பீலி சூடும் பிருந்தாவன பாலன் !
மங்கையின் மனத்தைக் கவர்ந்த சீலன் !

எப்போதும் சூழ்ந்து இருக்கும் சுற்றம் !
எப்பிறப்பிலும் கிடைக்காத பாச பந்தம் !
எங்கும் நிறைந்திருக்கும் நண்பர் கூட்டம் !
எங்கு தேடினாலும் கிடைக்காத பூந்தோட்டம் !

பசுமை வீசும் சிங்கார கிராமங்கள் !
பசியைப் போக்கும் நிலதெய்வங்கள் !
பார்ப்பவர் மனம் கவரும் தோட்டம் !
பரவசத்தைப் பரப்பும் பூக்கள் கூட்டம் !

அன்பான தாய் தந்தை !
அழகான குடும்பம் !
அறிவார்ந்த குருமார்கள் !
அனைத்துமாய் ஆண்டவன் !
அரவணைக்கும் உறவினர்கள் !
அக்கறையுள்ள நண்பர்கள் !

எத்துனை அழகான வாழ்க்கை !
எத்தனை பிறப்பிலும் கிடைக்காத பேறு !
அத்தனை பேருக்கும் நன்றிகள் நூறு !

- அரங்க ஸ்ரீஜா

Asamuyta Hasta Shloka - Single Handed Gestures

Hastas or Hasta Mudras are an integral part of Bharatanatyam, where stories are brought to life through hand gestures combined with facial e...