தங்கமாய் மின்னும் கதிரவனின்
கதிரொளி !
தங்கப் பயிர்களின் வாழ்விற்கு உயிரொளி !
தாமரையில் மலர்கின்ற இதழ்கள் !
தன்னிகரற்ற அழகுப் பெட்டகங்கள் !
பச்சைப் பட்டாடையாய்ப் பரந்த
வயல்கள் !
பாமரர் பசி போக்கும் சுந்தர
வெளிகள் !
பொங்கிப் பெருகும் கடலலைகள் !
பொங்கும் பேரானந்தத்தின் சுவடுகள் !
கொஞ்சும் கிளிகளின் சுந்தர
மொழிகள் !
பிஞ்சுக் குழந்தையின் மழலை
மொழிகள் !
சிகரம் தொடும் உயர்ந்த மலைகள் !
செதுக்கினாலும் கிடைக்காத
சிலைகள் !
மண்ணில் பொழியும் மழையின்
துளிகள் !
மானுடம் வாழ வித்திட்ட வழிகள் !
மலரும் பூக்களின் நறுமண வாசம் !
மங்கையின் மனம் முழுவதும்
வீசும் !
பறந்துத் திரியும் பறவைக்
கூட்டம் !
பார்ப்பவர் மனதில் மகிழ்வை
நாட்டும் !
தோகை விரித்தாடும் மயில் !
தோற்றத்தில் எத்தனை எழில் !
பூக்களில் அமரும் பட்டாம்பூச்சி !
பார்ப்பதற்குக் கண்கொள்ளாக்
காட்சி !
இயற்கையில் வாழும் கன்னி
!
வியக்கிறேன் அதன் சிறப்பை
எண்ணி !
- அரங்க ஸ்ரீஜா