மண்ணில் விழும் ஒவ்வொரு மழைத்துளியும்
மான்விழியாள் மனதை மாயக்கியதே !
என் தனிமையைப் போக்க வந்தாயோ !
உன் தண்மையை உணர்த்த விழுந்தாயோ !
விண்ணில் இருந்து நீ விழும் அழகில்
விம்மினேன் நான் வியப்பில் !
விருட்சம் வளர வருகின்றாயோ !
என் விரகத்தி போக்கப் பொழிகின்றாயோ !
மழைக்கால மேகம் ஊர்வலம் போகுதே !
விழைகிறதே மனம் உடன் செல்லவே !
உன் தீண்டலில் திகைத்தேன் !
என் துன்பங்களைத் தொலைத்தேன் !
விழும் துளிகளில் நனைவதற்கு !
விடுமுறை அளித்தேன் குடைகளுக்கு !
மின்னலும் இடியும் நண்பர்கள் உனக்கு !
மின்மினி போல் தெரிகிறாய் எனக்கு !
அடிக்கும் சாரலின் ஆனந்தத்தில் !
அடியவள் உருகினேன் அகத்தில் !
உல்லாச தூரலின் மணத்தில் !
உற்சாகம் பெருகியது மனதில் !
தங்கம் போல் மின்னுகிறாய் !
எங்கும் செழிப்பைத் தருகிறாய் !
மண்வாசம் தந்து மனம் நிறைந்தாய் !
என்வாசல் வந்து விலகி நின்றாய் !
சில்லென்ற மழைத் துளியே !
என் சிந்தையில் நின்றாயே !
கரங்களில் பட்டு சிதருகிராயே !
கருவிழி சிவக்கச் செய்கின்றாயே !
பொழியும் பொது பேரானந்தம் தருகின்றாய் !
விழியில் விழுந்து வியப்பை அளிக்கின்றாய் !
தரணிதனில் தண்மை காக்கின்றாய் !
தரிசனம் தந்து உடன் மறைகின்றாய் !
தொட்டு விளையாடுகிறாய் என்னை !
கட்டித் தழுவுகிறாய் மண்ணை !
விட்டுப் பிரிந்தாய் என்னை !
எட்டிப் பிடிப்பேன் உன்னை !
- அரங்க ஸ்ரீஜா
No comments:
Post a Comment