Friday 27 December 2013

அன்பான என் தந்தைக்கு...



அன்புள்ள அப்பா !!!
தயைமிகு தந்தை !!!
நாயமான நண்பன் !!!
பாசமுள்ள பகைவன் !!!
அறிவுள்ள ஆசான் !!! 
கோத்தில் குழந்தை !!!
இரக்கத்தில் இறைவன் !!!
ஈகையில் ஈசன் !!!

இவ்வாறு எல்லா உருவத்திலும் என்னோடு இருக்கின்றாய் !
அன்பைப் பொழிந்து அன்னையாய் அரவணைக்கின்றாய் !
கல்வியைக் கற்பித்து என் குருவாய் நிற்கின்றாய் !
பக்தியைப் போதித்து  பரம்பொருளாய் விளங்குகின்றாய் !
சிறு சண்டை போடுவதில் சிறுபிள்ளையாய்ச் சிணுங்குகின்றாய் !
நன்மைகளை உணர்த்தி நண்பனாய் நிற்கின்றாய் !
பார்க்கும் திசையெல்லாம் தாமாகத் தெரிகின்றாய் !
வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் உடன் வருகின்றாய் !
செய்யும் ஒவ்வொரு செயலிலும் துணை நிற்கின்றாய் !

நும் வார்த்தைகளில் வாழ்வது வாய்மை
நும் நேத்திரத்தில் நிற்பது  நேர்மை
நும் உள்ளத்தில் உள்ளது உண்மை
நும் துயிலிலும் தங்குவது தூய்மை
நும் அன்பிற்கு என்றென்றும் நான் அடிமை

விண்ணுலகில் வாழும் இறைவன் எனக்காக
மண்ணுலகம் வந்தான் என் தந்தையின் உருவில்!
வீடும் நாடும் எதற்காக என்னோடு நீ இருக்கையில்!
உலகையே கண்டேன் உன் கடைவிழிப் பார்வையில் !
பேரானந்தத்தைப் பருகினேன் உன் புன்சிரிப்பில் !
படைக்கும் அஞ்சேன்  பாசத்தந்தை உடனிருக்கையில்!
விண்ணையும் வெல்வேன் வீரத்தந்தை உடனிருக்கையில்!

மனம் மகிழ்ந்தேன் நும் மடியில் தவழ !
தவம் கிடந்தேன் உம்மைத் தந்தையாய் அடைய !
புண்ணியம் செய்தேன்  நும் புதல்வியாய்த் தோன்ற !
எத்துனை பிறவி எடுத்தாலும் எந்தையாக
என்னுடன் என்றென்றும் நீயே இருந்திட இறைவனை வேண்டுகிறேன்! 

அரவத்தில் பள்ளி கொண்ட அரங்க நாதா !!
சத்தியத் திருவுருவின் பிராண நாதா !!
பெற்றேன்  பாக்கியம்  நும் பிள்ளையாய்ப் பிறக்க !!


- அரங்க ஸ்ரீஜா 

4 comments:

  1. akka really you are great sema ka ungalukula ivlo talent realy wen i read all this am speechless u r awesome

    ReplyDelete
  2. சிலிரித்தேன் தங்களின் பாசத்தால்
    மகிழ்ந்தேன் உங்கள் கைவண்ணத்தால்
    மனம் குளிர்ந்தேன் உங்கள் தந்தை மகள் உறவால்
    பூரித்தேன் உங்களின் சீரிய எண்ணத்தால்
    தலை வணங்குகிறேன் உங்கள் படைப்புகளுக்கு
    நலமோடும் வளமோடும் வாழ்வாங்கு வாழ்ந்திடுக .
    வாழ்த்துக்கள்
    பழனி குமார்
    சென்னை

    ReplyDelete
    Replies
    1. ஐயா ,
      தங்கள் வருகைக்கும் ஆசிக்கும் வாழ்த்துக்கும் தலை வணங்குகிறேன். எனக்காக நேரம் செலவழித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ..தங்கள் வாழ்த்திலும் கவிநயம் கண்டு வியக்கிறேன்.


      என்றென்றும் சான்றோர் ஆசியை நாடும்
      அரங்க ஸ்ரீஜா

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

Asamuyta Hasta Shloka - Single Handed Gestures

Hastas or Hasta Mudras are an integral part of Bharatanatyam, where stories are brought to life through hand gestures combined with facial e...