தோள் கொடுக்கும் தோழன் நீ !
பார் புகழும் பக்தன் நீ !
திறம் கொண்ட தீரன் நீ !
தர்மம் செய்யும் தர்மன் நீ !
உன் கோபத்தில் குழந்தையைக் காண்கிறேன் !
உன் வேகத்தில் வேங்கையைக் காண்கிறேன் !
உன் வார்த்தைகளில் வலிமையைக் காண்கிறேன் !
உன் அர்ப்பணிப்பில் இறைவனைக் காண்கிறேன் !
கொஞ்சும் உன் மொழியில் குழலும் தோற்கும் !
மிஞ்சும் உன் அழகில் மயிலும் தோற்கும் !
உன் அன்பிற்கு முன் அன்னையும் தோற்றார் !
உன் அறிவிற்கு முன் ஆசிரியரும் தோற்றார் !
உன் கரம் பிடித்து நடக்கையிலே !
உள்ளத்தின் அச்சங்கள் விலகுகிறதே !
உன் கடைக்கண் பார்வையிலே !
உள்ள கடினங்கள் அனைத்தும் மறைகிறதே !
அகிலத்தை ஆளும் ஆண்டவன் !
அடியவளின் தந்தையாக அவதரித்தான் !
கர்வம் கொண்டேன் உன் மகளாய் இருக்கவே !
ஆர்வம் கொண்டேன் உன்னைப்போல் வாழவே !
நான் கற்றது அனைத்தும் உன்னிடமிருந்து !
உன் பார்வையின் கூர்மையில் தோற்றது பருந்து !
உன் அறிவுரைகளே என் வாழ்வின் விருந்து !
என் தந்தையே உன்னைப் பணிகிறேன் விழுந்து !
- அரங்க ஸ்ரீஜா
No comments:
Post a Comment