Friday, 6 March 2015

அழகான வாழ்க்கை...




அன்பிற்கு எல்லையாய் அன்னை !
அரவணைத்து வளர்க்கின்றாள் என்னை !
அறிவிற்குச் சிகரமாய்த் தந்தை !
அறிவுரையால் சீரானது என் சிந்தை !

கல்வியைக் கண்ணாய்க் கற்பிக்கும் ஆசிரியர்கள் !
கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியவர்கள் !
கலைகளைச் சிறப்பாய்க் கற்பிக்கும் குருமார்கள் !
கலைமகளின் உருவாய்த் தோன்றியவர்கள் !

ஓம் காரப் பிரணவமாய் விளங்கிடும் இறைவன் !
ஒவ்வொரு மணித்துளியும் என்னுடன் இருக்கும் பரமன்   !
ஓதும் வேதமாய் எங்கும்  நிறைந்திருக்கும் பரந்தாமன் !
ஒவ்வொரு செயலிலும் என் துணையாய் நிற்கும் நண்பன் !

அனுபவங்களைப் பகிரும் தாத்தா பாட்டி !
அணுகினேன் அவர்களை இருகரம் நீட்டி !
அன்றாடம் என்னை வாழ்த்தும் தாத்தா !
அடைந்தேன் மகிழ்வை அவரது பாட்டால் !

குழலோடு எழிலாகக் காட்சியளிக்கும் கண்ணன் !
குழந்தைக்கு என்றும் துணையாய் நிற்கும் மன்னன் !
மயிற்பீலி சூடும் பிருந்தாவன பாலன் !
மங்கையின் மனத்தைக் கவர்ந்த சீலன் !

எப்போதும் சூழ்ந்து இருக்கும் சுற்றம் !
எப்பிறப்பிலும் கிடைக்காத பாச பந்தம் !
எங்கும் நிறைந்திருக்கும் நண்பர் கூட்டம் !
எங்கு தேடினாலும் கிடைக்காத பூந்தோட்டம் !

பசுமை வீசும் சிங்கார கிராமங்கள் !
பசியைப் போக்கும் நிலதெய்வங்கள் !
பார்ப்பவர் மனம் கவரும் தோட்டம் !
பரவசத்தைப் பரப்பும் பூக்கள் கூட்டம் !

அன்பான தாய் தந்தை !
அழகான குடும்பம் !
அறிவார்ந்த குருமார்கள் !
அனைத்துமாய் ஆண்டவன் !
அரவணைக்கும் உறவினர்கள் !
அக்கறையுள்ள நண்பர்கள் !

எத்துனை அழகான வாழ்க்கை !
எத்தனை பிறப்பிலும் கிடைக்காத பேறு !
அத்தனை பேருக்கும் நன்றிகள் நூறு !

- அரங்க ஸ்ரீஜா

Saturday, 24 January 2015

என் அப்பா...

 


தோள் கொடுக்கும் தோழன் நீ  !
பார் புகழும் பக்தன் நீ !
திறம் கொண்ட தீரன் நீ !
தர்மம் செய்யும் தர்மன் நீ !

உன் கோபத்தில் குழந்தையைக் காண்கிறேன் !
உன் வேகத்தில் வேங்கையைக் காண்கிறேன் !
உன் வார்த்தைகளில் வலிமையைக் காண்கிறேன் !
உன் அர்ப்பணிப்பில் இறைவனைக் காண்கிறேன் !

கொஞ்சும் உன் மொழியில் குழலும் தோற்கும் !
மிஞ்சும் உன் அழகில் மயிலும் தோற்கும் !
உன் அன்பிற்கு முன் அன்னையும் தோற்றார் !
உன் அறிவிற்கு முன் ஆசிரியரும் தோற்றார் !

உன் கரம் பிடித்து நடக்கையிலே !
உள்ளத்தின் அச்சங்கள் விலகுகிறதே !
உன் கடைக்கண் பார்வையிலே !
உள்ள கடினங்கள் அனைத்தும் மறைகிறதே !

அகிலத்தை ஆளும் ஆண்டவன் !
அடியவளின் தந்தையாக அவதரித்தான் !
கர்வம் கொண்டேன் உன் மகளாய் இருக்கவே !
ஆர்வம் கொண்டேன் உன்னைப்போல் வாழவே !

நான் கற்றது அனைத்தும் உன்னிடமிருந்து !
உன் பார்வையின் கூர்மையில் தோற்றது பருந்து !
உன் அறிவுரைகளே என் வாழ்வின் விருந்து !
என் தந்தையே உன்னைப் பணிகிறேன் விழுந்து !


 - அரங்க ஸ்ரீஜா 

Sunday, 30 November 2014

என் அன்னை...



கல்வி கற்பிக்கும் கலைமகளே
ஆசி அளிக்கும் அலைமகளே
மகிழ்வளிக்கும் மலைமகளே

உலகிற்கு என்னை அறிமுகம் செய்தாய்
உளமார என்மேல் அன்பைப் பொழிந்தாய்
மலர் கரங்களால் என்னை அணைத்தாய்
என் மழலை மொழி கேட்டு மகிழ்ந்தாய்

பசியால் நான் அழுதால் - என்
கண்ணீர் கண்டு நீ அழுவாய்
நிலத்தில் நான் விழுந்தால்
நொடிப் பொழுதில் நீ விரைவாய் 

ஓடி ஓடி உணவூட்டினாய்
ஆடிப் பாடி மகிழ்வித்தாய்
தேடிப் பிடித்து விளையாடினாய்

உன்  கண்ணின்  கனவுகள்  நான்
உன் வாழ்வின் வானவில்  நான் 
எனக்கென வாழ்கின்றாய்  தாயே
என் உயிரில் கலந்திட்டாய்  நீயே

அறிவுரை அளித்தாய் அன்னையாக
கலைகளைக் கற்பித்தாய் குருவாக
தோள்தட்டிக்  கொடுத்தாய் தோழியாக

மணம் கமழும்  பூவே
மனம்  கவரும் ரதியே
வாழ்வளித்தாய் எனக்கு
வாழ்வை அர்ப்பணித்தேன் உனக்கு

-    அரங்க ஸ்ரீஜா

Sunday, 21 September 2014

அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு…


குரு என்னும் வார்த்தைக்கு
உருக் கொடுத்த உன்னதமே !
ஏடு தூக்கும் மாணவர்களை - நாளை
நாடு காக்கும் நல்லோராய்
சிந்தனைச் சிற்பிகளாய்
சாதனைச் செல்வங்களாய்
சுதந்திர  நாட்டிற்கு வளம்சேர்க்க
வார்த்தெடுக்கும் வள்ளலே !

அருங்கல்வியைப் போதித்து
அனுபவங்களைப் பகிர்ந்து
ஆயகலைளைக் கற்பித்து
வாழ்விற்கு வழிகாட்டும்
வாழ்வியல் புத்தகமே - உம்மை
வாழ்த்துவோம் நித்தமுமே !

எங்கள் வாழ்வுப் பயணத்தில்
ஏணிப் படியாயிருந்து
எதிர்பார்ப்பு இல்லாமல் - எங்களை
ஏற்றமடைய வைத்த ஏந்தலே !
உம் வார்த்தைகளின் வழி நடப்போம்
எம் வாழ்வதனில் தடம் பதிப்போம்

உந்தம் வழித்தோன்றல்

-அரங்க ஸ்ரீஜா

Friday, 15 August 2014

தென்றல் !

தென்றல் !!!



அசைந்தாடும் அழகிய தென்றல் வந்து !
அழகிய பெண்ணின் செவியில் நின்று !
அசரீரி போன்று ஒரு செய்தி சொன்னது !

வாழையும் மாவும் தென்றலுக்கு ஒன்றே !
ஏழையும் செல்வந்தனும் தென்றலுக்கு ஒன்றே !
வானமும் பூமியும் தென்றலுக்கு ஒன்றே !

பேதம் பார்த்துத் தென்றல் வீசுவதும் இல்லை !
மதம் பார்த்துத் தென்றல் விலகிப்போவதும் இல்லை !
மாதம் பார்த்துத் தென்றல் மறைவதும் இல்லை !

எங்கும் நிறைந்து நான் தண்மை தருகிறேன் !
பொங்கும் மனங்களில் ஆனந்தம் அளிக்கிறேன் !
ஏங்கும் இதயங்களை இதமாய்த் தொடுகிறேன் !

மெல்லிய மனங்களை வருடுகிறேன் !
செல்லத் தீண்டலால் இதம் தருகிறேன் !
மெல்ல வந்து மனம் கவர்கிறேன் !

மக்கள் மனதில் ஏன் இத்தனை பேதம் !
மாக்களும் கூட காட்டிடும் கோபம் !
பூக்களைப் போல வாழ்வோம் நாமும் !

தூது சொல்ல தென்றல் வந்தது !
சூது அழிக்க வழி சொன்னது !
கேடு காலம் இனி அழிந்தது !

தென்றலின் கூற்றைக் கேட்டு வியந்தேன் பேதை !
என்றுமே இதயங்களை வருடும் நீ ஒரு போதை !
என்றென்றும் பார் செழித்திடக் காட்டினாய் பாதை !

- அரங்க ஸ்ரீஜா 

Thursday, 14 August 2014

சுதந்திர தினம்



மூவர்ணக் கொடியை
முத்தமிழ்ப் புகழை
முத்தான தேசத்தை
முத்தமிட்டே பணிகிறேன்

சுதந்திரக் காற்று
சுதேசியின் மூச்சு
சுதந்திரத்தைப் போற்றுவோம்
சுந்தர தேசத்தை வளர்ப்போம்



இந்திய நாட்டிற்கு - என்னால்
இயன்ற மெட்டு


My Piano Music of Anthem





-அரங்க ஸ்ரீஜா 

Saturday, 5 July 2014

MY PENCIL ARTS





INNOCENCE



WARRIOR PRINCE




PRINCESS JODHA


BRIDE

RAJPUT PRINCESS

RAJASTHANI WOMAN

PRINCESS BELLE

PRINCESS JASMINE

PUNJABI BRIDE

MY MOM

SELF PORTRAIT


MY DAD




Asamuyta Hasta Shloka - Single Handed Gestures

Hastas or Hasta Mudras are an integral part of Bharatanatyam, where stories are brought to life through hand gestures combined with facial e...