Wednesday 1 January 2014

என் காவியத் தலைவன் !!



பரணி  போற்றும் நாயகனே !
புரவி  ஏறி வருபவனே !
புதுக்  கவிதை  வடிக்கின்றேன்
புவன  சுந்தரனை  அடையவே !

எங்கு  இருக்கிறாய் ?  - ஏன்
ஏங்க  வைக்கிறாய் ?
காண  விழைகிறேன்  –ஏன்
கலங்கச்  செய்கிறாய் ?

அறியேன்  உன்  தோற்றம்
அறிய  விரும்புதே  நெஞ்சம்
மலர்  முகம்  காணாமலே
மனம்  நிறைந்தாய்  கண்ணாளனே !

தரிசனம்  அளிக்க  மாட்டாயா  ?
கரிசனம்  பார்க்க  மாட்டாயா ?
உன்னைச்  சேரத்  துடிக்கின்றேன்
என்னை  ஏற்க  மாட்டாயா ?

ஏங்கித்  தவிக்கிறதே  மனம்
உன்னைக்  காண  வேண்டுதே  தினம்
காத்து  நிற்கிறேன்  உனக்காக
காதல்  நிறைந்த விழிகள்  சிவக்க 

கனவில்  காண்கிறேன்  உன்னை
கண்டதும்  மறக்கிறேன்  என்னை
முகிலாய்  தோன்றினாய்  விண்ணோடு
கவிதையாய்  மாறினாய்  கையோடு


நினைவுகளில்  நடமாடும்   உன்னை
நேரில்  காணவிழைகிறேன்  நங்கை 
மனம்  வென்ற  மணவாளனே !
முகம்  காண  மனம்  ஏங்குதே !

உன்  வருகைக்காகக்  காத்திருப்பேன்
மான்விழி  சிவக்கப்  பூத்திருப்பேன்
மாலை  சூட  வருவாயா  ?
மனதை  எடுத்துச்  செல்வாயா ?

உன்  உள்ளம்  நிறைவேனா ?
இல்லை  விண்ணை  அடைவேனா ?        
விடைகள்  அறியாமலே
விழிகள்  கலங்கிடுதே !

- அரங்க ஸ்ரீஜா 

2 comments:

  1. அழகிய தமிழில், அருமையான கருத்துக்கள். வாழ்துக்கள் :)

    ReplyDelete
  2. chukka madhu sudhan rao

    ReplyDelete

Asamuyta Hasta Shloka - Single Handed Gestures

Hastas or Hasta Mudras are an integral part of Bharatanatyam, where stories are brought to life through hand gestures combined with facial e...